விஜயின் முன்றாவது திரைப்படம் ரசிகன். படம் வெளிவந்த ஆண்டு 1994. கதாநாயகியாக நடித்தவர் சங்கவி, இசை தேவா, கேமரா ரவிசங்கர் மற்றும்
எடிட்டிங் கெளதம்ராஜ்.
விஜய் அவர்களின் முதல்
முன்று படங்களிலும் அவரது பெயர் விஜய் தான். இந்ததிரைபடத்தில் தான் முதல்முதலில் இளையதளபதி என்ற பட்டம் விஜயின் பெயர்க்கு முன்னால் போடப்பட்டது. படத்தில் சங்கவி அவர்கள் கொஞ்சம்
கவர்ச்சி ஆக நடித்திருப்பர். இத்திரைப்படம் ஒரு வெற்றி படம். இந்தப்படம் வந்தபொழுது அதிகம் விமர்சிக்கபட்டது என்ன என்றால் அது படத்தில் வரும் ஹீரோ ஹீரோயினுக்கு சோப்பு போடும் காட்சிதான். இத்திரைப்படத்தில் தான் விஜய் அவர்கள் முதல்முதலில் பாடல் பாடினார். அது “பம்பாய் சிட்டி” என்று தொடங்கும் பாடல். பாடலின் இடையில் இந்தப் பாடலை பாடியவர் உங்கள் விஜய் என்ற வசனம் வரும்.
கதை: விஜய் வீட்டு மாடியில்
வாடகைக்குக் குடி இருப்பார் சங்கவி. முதலில் இருவரும் சண்டை போட்டுக்கொண்டாலும்
பின்பு காதலிக்க ஆரம்பித்து விடுவர். சங்கவின் தந்தை ஒரு காவல் துறை அதிகாரியாக
இருப்பார், அவருக்கு இவர்களின் காதல் தெரிந்தவுடன் சென்னைக்கு தன்னை
மாற்றிக்கொண்டு குடும்பத்துடன் சென்றுவிடுவார். பின் விஜய் சங்கவியை தேடி சென்னை
செல்லும் இடத்தில ஒரு கொலை நடந்துவிடும் அதை விஜய்தான் செய்தார் என்று கொலைபழி
விஜய் மீது விழுந்துவிடும். கொலைபழியில் இருந்து விஜய் எப்படி தப்புகிறார், கொலையை
யார் செய்தது மற்றம் விஜயும் சங்கவியும் இனைதணர என்பது முடிவு.
![]() |
இளையதளபதி என்ற பட்டம் வரும் காட்சி
|
![]() |
விஜய் பாடிய பாடலின்
இடையில் இந்தப் பாடலை பாடியவர்
உங்கள் விஜய் என்ற வசனம் வரும் காட்சி.
பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்
1. சில்லென சில்லென 2. ஆட்டோ ராணி 3. பீச்சோரம் 4. லவ் லவ் மாமா 5. பாம்பே சிட்டி 6. தம்பி கொஞ்சம் Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும். |
No comments:
Post a Comment