Thursday, 14 September 2017

இளையதளபதி விஜயின் ஆரம்ப வாழ்க்கை

விஜய் அவர்களின் இயற்பெயர் ஜோசப் விஜய் சந்திரசேகர் , அவர் பிறந்தது 22 ஜூன் 1974 அன்று மெட்ராஸ் இல். அவரது தந்தையின் பெயர் S.A.சந்திரசேகர், தாயார் ஷோபா சந்திரசேகர். S.A.சந்திரசேகர் அவர்கள் ஒரு இயக்குநர் மற்றும் ஷோபா அவர்கள் பின்னணி பாடகர். இவர்களுக்கு விஜய் மற்றும் ஒரு மகள் இருந்தனர். மகளின் பெயர் வித்யா ஆனால் அவருடைய 2 வயதில் இறந்து விட்டார்.

விஜய் அவரது குழந்தை பருவத்தை சென்னையில் கழித்தார், அவர் பள்ளி படிப்பை Balalok Matriculation Higher Secondary School, Virugambakkamஅதை தொடர்ந்து அவர் Visual Communications படிப்பை Loyola College இல் படித்தார் படித்துக்கொண்டு இருக்கும் போதே நடிப்பின் ஆசையில் தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். விஜய் அவர்கள் அவரது தந்தையிடம் நடிக்க வாய்ப்பு கேட்ட போது அவர் மறுத்து விட்டார் அன்று விஜய் அவர்கள் வீட்டில் நான் வீட்டை விட்டு போகின்றேன் என்று எழுதிவைத்து விட்டு சென்றுவிட்டார். பிறகு தேடிப்பார்த்த பொழுது அவர் அசோக் நகரில் உள்ள உதயம் தியேட்டர் இல் படம் பார்த்து கொண்டு இருந்தார் அதன் பின் விஜய் அவர்கள் தனது தந்தையிடம் அண்ணாமலை படத்தில் வரும் டயலாக் பேசி சம்மந்தம் வாங்கினார்.

விஜய் அவர்கள் சங்கீதா என்பவரை 25 ஆகஸ்ட் 1999 அன்று திருமணம் செய்தார் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும்  மகள் இருக்கின்றனர். மகனின் பெயர் சஞ்சய் மற்றும் அவர் வேட்டைக்காரன் படத்தில் முதல் பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். மகளின் பெயர் திவ்யா அவர் தெறி படத்தில் இறுதி காட்சி யில் நடித்துஉள்ளர்.


தாய் தந்தை உடன் விஜய் 
மனைவியுடன் விஜய் 
மகனுடன் வேட்டைக்காரன் திரைப்படத்தில் விஜய் 
மகளுடன் தெறி திரைப்படத்தில் விஜய் 




No comments:

Post a Comment