விஜயின் எட்டாவது திரைப்படம் கோயம்புத்தூர் மாப்பிள்ளை. படம் வெளிவந்த ஆண்டு 1996. இயக்கியவர் C. ரங்கநாதன். கதாநாயகியாக நடித்தவர் சங்கவி, இசை வித்யாசாகர், கேமரா ராஜ ரத்தினம் மற்றும் எடிட்டிங் செட்ரிக். இந்த படத்தில் விஜய் அவர்கள் இரண்டு பாடல்கள் பாடி உள்ளார். அது "கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்ச" & " பம்பாய் பார்ட்டி".
கதை: விஜய் அவர்கள் வேலை தேடி சென்னைக்கு அவரது நண்பர் (கவுண்டமணி) வீட்டுக்கு வருகிறார். உண்மையில் அவருக்கும் வேலை இல்லை. அவர்கள் இருவரும் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருகின்றனர். அந்த வீட்டு பெண் சங்கவிக்கும், விஜய்க்கும் முதலில் சண்டை வருகிறது. பிறகு இருவரும் காதலிக்க ஆரமிக்கின்றனர். இதற்கிடையில் சங்கவி இன் மாமா கரனும் அவரை காதலிக்கிறார். ஒரு நாள் திருடன் ஒருவன் நகைய திருடி கொண்டு ஓடுவதை விஜய் பார்த்து பிடிக்க முயல்கிறார். ஆனால் திருடன் அந்த நகையை விஜய் பையில் போட்டுவிடுகிறார். இதை பார்த்த சங்கவி, விஜயை வெறுக்க ஆரமிக்கிறார். இதை தனக்கு சாதகமாக்கிகொள்கிறார் கிரண். ஒரு ரௌடி கும்பலுடன் தன்னை அடிக்க வைக்கிறார் அதையும் விஜய் தான் செய்தார் என நம்பவைக்கிறார். விஜய் சங்கவியின் பாட்டியிடம் தனது கதையை சொல்கிறார். பாட்டி விஜயின் மீது நம்பிக்கை வைக்கிறார். திடீர் என பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிகின்றனர். அப்பொழுது தான் கரனும் அவரது தந்தையும் சேர்ந்து தன்னையும் தனது பாட்டியையும் கொலை செய்ய இருக்கின்றனர் என்பதை அறிகிறார். இதன் பின் விஜயும் சங்கவியும் இணைதார்களா, கரனும் அவரது தந்தையும் என்ன ஆனார்கள் என்பது தான் முடிவு.
பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்
1. அண்ணாமலை தீபம்
2. கோயம்பத்தூர் மாப்பிள்ளைக்கு
3. ஜீவன் என் ஜீவன்
4. ஒரு தேதி பார்த்தால்
5. பாம்பே பார்ட்டி
6. ஓகே ஓகே மாமு ஓகே
Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.
No comments:
Post a Comment